Monday 5 October 2020

மனிதன் சிறந்தவன் ; ஏன் ? (பகுதி 1)

 

மனிதன் சிறந்தவன்

நான் சிறந்த மனிதன்

இப்படி எல்லோரும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

ஆனால் நீங்கள் எப்பொழுது சிறந்த மனிதனாகி சந்தஷோப்பட்டுக் கொள்ள முடியும்?

 

ஆதமுடைய மக்களை நாம் கண்ணியப்படுத்தினோம் என்று அல்லாஹ்  {17 ;70} கூறுகிறான்.

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ

மனிதன் சிறந்தவனாக,உயர்ந்தவனாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டு இருக்கிறான் என்றால், எந்த வகையில் அவன் சிறந்தவன்?,என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

 

இந்த உலகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான வாழ்வாதாரங் களைத் தேடுவதிலே தேவையான அறிவையும், ஆற்றலையும் அவன் பெற்றிருக் கிறான்.அதனால் அவன் சிறந்தவன் என்று சொல்ல முடியுமா? என்றால், இது மாதிரியான ஆற்றலையும், அறிவையும் உலகத்தில் இருக்கிற எல்லா உயிரினங்களுக்கும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.

قَالَ رَبُّنَا الَّذِي أَعْطَى كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَى

எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான படை கோலத்தை கொடுத்து அவைகள் வாழும் வழிவகைகளை {அவைகளுக்கு} அறிவித்துக் கொடுத்தானோ அவன் தான் எங்கள் இறைவன்என்று அவர் {மூஸா நபி  {அலை} அவர்கள்}கூறினார். {அல்குர்ஆன் 20 50}

இதன் தொடர் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம் ........


1 comment:

  1. இதன் தொடர்ச்சி ஹஜ்ரத்..?

    ReplyDelete

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks