Friday 13 December 2013

மழை நீர் மாபெரும் அருட்கொடை

நீரின்றி அமையாது உலகு என்பது முதுமொழி .
உலகத்தையே ஒரு பாட்டிலுக்குள் அடைக்க முடியுமா?
அடைத்துக் காட்டிய அறிஞர் இப்னு அப்பாஸ் ரலி
இன்னும் பல....


Friday 6 December 2013

நெகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் (ஜும்ஆ பயான் 06-12-2013)



குடிகாரனின்  மரணத்தின்போது அவனை ஒரு பாம்பு விழுங்கிய காட்சி ...
வட்டி வாங்கி உணடவனின் மண்ணறையில் தீ எரிந்த விபரீதம் 
அதே போல சிலரை அல்லாஹ் ஆச்சரியமான முறையில் காப்பாற்றவும் செய்கிறான் பாம்பு கொத்தவிருந்த ஒருவனை எங்கிருந்தோ வந்த தேள் காப்பாற்றிய நிகழ்வு ..
இன்னும் பல நிகழ்வுகள் ..

Friday 22 November 2013

தன்னம்பிக்கை தரும் தரமான மார்க்கம்


இறை நம்பிக்கையும்  தன்னம்பிக்கையும் இல்லாத அநேகர் விரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
எல்லாம் இறைவன் விதித்தபடிதான் நடைபெறுகிறது என்று புரிந்துணர்வு நமக்குள் நல்ல நம்பிக்கையை உருவாக்குகிறது.
எந்த ஒரு கஷ்டத்தையும் எதிர்கொள்ளுகிற மனப்பக்குவத்தை ஏற்படுத்துகிறது.

Tuesday 19 November 2013

இஸ்லாத்தில் இயற்கை மீறல் இல்லை


மரணம் என்பது ஒரு சோகமான முடிவுதான். அதற்காக துக்கம் அனுஷ்டிக்கிறோம் என்ற பெயரில்,

  • ஒப்பாரி வைத்து அழுவது, 
  • சட்டையைக் கிழித்துக் கொண்டு அழுவது, 
  • கன்னத்தில் அடித்துக்கொண்டு அழுவது 
  • இதுபோன்ற இயற்கை மீறிய செயல்பாடுகள் இஸ்லாத்தில் இல்லை. 


அதேபோல மரணத்தைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் வேறு சிலர்

  • வெடிவெடித்து 
  • தார தப்பட்டைகள் அடித்து 
  • மேளதாளங்கள் முழங்கி மரண ஊர்வலங்கள் நடத்துகிறார்கள் 
இதுவும் நம் மார்க்கத்தில் ஆகுமானதல்ல.


இதுபோன்ற சமயங்களில் நம் உணர்வுகளை நாம் எப்படி வெளிப்படுத்தவேண்டும்?


Saturday 9 November 2013

ஆஷூராவின் வரலாற்றுக் குறிப்புகள்....



சுன்னத்தான ஆஷுரா நோன்பு ஆதிகால வரலாற்று சிறப்பிற் குறியதும். ரொம்ப மகத்துவமானதும்,பேரருள் நிறைந்ததுமாகும்.

அறியாமைக் காலத்திலேயே குறைஷிகள் ஆஷுரா தினத்தில் நோன்பு பிடித்து வந்தார்கள்.

அண்ணல் நபிகள் நாயகம் {ஸல்} அவர்களும் ஆஷுரா அன்று அறியாமைக் காலத்தில் நோன்பு வைத்துள்ளார்கள்.

மதீனா வந்த பிறகும் மா நபி {ஸல்} அவர்கள் நோன்பை தொடர்ந்தார்கள்.

அந்த நோன்பை நோற்கும்படி உத்தரவிட்டார்கள்.

இது {ஆஷுராதினம்} மகத்தான ஒரு நாள். {முஸ்லிம்}.
இது ஒரு நல்ல நாள்.இஸ்ரவேலர்களை அவர்களுடைய விரோதிகளை விட்டும் அல்லாஹ் காப்பாற்றிய தினம்.ஆகவே அன்று மூஸா நபி அவர்கள் நோன்பு வைத்தார்கள் என்று யூதர்கள் வாயிலாக {வும்} கேள்விப்பட்டு நபி மூஸா {அலை} அவர்களுக்கு{அவரது வெற்றியை கொண்டாடு வதற்கு} உங்களை விட நாங்கள் ரொம்ப அருகதை உள்ளவர்கள் என்று கூறி நபி ஸல் அவர்கள் அன்று நோன்பு பிடிக்க உத்தரவிட்டார்கள்.

இதை ரொம்ப வலியுறுத்தியுள்ளார்கள். "இன்று ஆஷுரா தினம்.இது வரை சாப்பிடாதவர்கள் அப்படியே நோன்பு வைத்துக்கொள்ளுங்கள். சாப்பிட்டவர்கள் {இனிமே சாப்பிடாமல்}நோன்பை தொடர வேண்டும்" என்று பொதுமக்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தார்கள்.மேலும் இதை பகிரங்கப்படுத்தும்படி உத்தரவிட்டார்கள்.

Wednesday 6 November 2013

ஹஜ் உரை பகுதி -1


  • இப்பூமியில் முதலில் எழுப்பப்பட்டது இறையில்லம்தான் .
  • ஆதம் அலைஹிஸ் ஸலாம்,  தான் வாழ இல்லம் அமைப்பதற்கு முன் வணங்க இல்லம் அமைத்தார்கள் .
  • மஸ்ஜிது கட்டுவதிலும் மார்க்க கடமைகளிலும் மலேசிய மண்ணின் மைந்தர்கள் காட்டிய ஆர்வம் .
  • உலகில் முதன் முதலாக ஹஜ்ஜுக்குப் புறப்பட்டது இந்தியாவிலிருந்துதான் .
  • இன்னும் பல அரிய தகவல்கள் ...........


Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks