Saturday 24 September 2016

ஏகத்துவமே இயற்கை

قال النبي صلي الله عليه وسلم
كل مولود يولد علي فطرة الإسلام  رواه البخاري
"பிறக்கும் எல்லாக்குழந்தையும் இஸ்லாமிய இயற்கை(யான ஏகத்துவ நன்னெறி)யின் மீதே பிறக்கின்றன" நபி மொழி .நூல்:புகாரி

உலகப்புகழ் பெற்ற பேரறிஞர் இங்கர்சால் ஒரு நாத்திக வாதி."கடவுள் இல்லை" என்ற கொள்கை யில் மிகவும் தீவிரமாகவும் உறுதியாகவும் இருந்து வந்தவர். ஒரு நாள் இங்கர்சாலின் மகள் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டாள். மகள் கீழே விழுவதைப் பார்த்த அதிர்ச்சியில்  தீவிர நாத்திகரான இங்கர்சாலின் வாயிலிருந்து வெளி வந்த வார்த்தை என்ன தெரியுமா? "ஓ  மை  காட்....!

பிரிட்டனைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜஸ்டின் குழந்தைகள் பற்றி
ஒரு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகள் பற்றி பல அரிய தகவல்களை கண்டறிந்தார். பிறக்கும் குழந்தைகள் தனது தாய் தந்தை மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் கொள்கை களயும் கோட்பாடுகளையும் போதிக்கப்படாத நிலையில் வளர்க்கப்பட்ட குழந்தைகளின் உள்ளங்களில் ஏகத்துவமே குடி கொண்டிருக்கிறது என்று அவர் தனது ஆராய்ச்சியில் கண்டறிந்தார்

ஐஸக் நியுட்டன்  மனித வரலாற்றிலேயே மிகப் பெரிய விஞ்ஞானி. பதினேழாம் நூற்றாண்டு..கால்குலஸ்ஸின் அடிப்படை யைக் கண்டு பிடித்தவர்.
இந்த மாபெரும் விஞ்ஞானி தனது கடைசி காலத்தில் சொன்னார்;
"நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.இங்கே ஒரு கூழாங்கல்,அங்கே ஒரு அழகான சங்கு என்று கண்டுபிடித்துப் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கையில் எதிரே உண்மை என்ற மாபெரும் சமுத்திரம் இன்னும் கண்டறியப்படாமல் பரவிக் கிடக்கிறது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டைன் நாத்திகரல்ல. ஒரு முறை ஒரு யூத மதகுரு,"நீங்கள் கடவுளை நம்பு கிறீர்களா?" என்று கேட்டதற்கு  ;"நான் கடவுளை நம்புகிறேன்.பிரபஞ்சத்தின் அத்தனை விதிகளின் ஒருமைப்பாட்டிலும் தன்னைக் காட்டிக்கு கொள்ளும் கடவுளைத்தான் நம்புகிறேன். என்று பதிலளித்தார்

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks