Thursday 7 April 2016

கல்வியின் சிறப்பு


                               


இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் எழுதிய புகாரி என்ற புத்தகம் பல அத்தியாயங்களைக் கொண்டது. அதில் மூன்றாவது அத்தியாயம் கிதாபுல் இல்ம் கல்வியைப் பற்றியதாகும்.இந்த அத்தியாயத்தின் முதல் பாடம் கல்வியின் சிறப்பு என்பதாகும்.இதில் திருக்குர்ஆனின் இரு வசனங்கள் குறிப்பிடப்படுகிறது.


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ ۖ وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

ஈமான் கொண்டவர்களே! சபைகளில் நகர்ந்து இடங்கொடுங்கள்என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர் களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்.  அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 58 ;11)

ஒரு சபை என்பது, அதற்கு முந்தி வருபவர்கள் முதல் இடத்தில் அமர வேண்டும். பிந்தி வருபவர்கள் அதற்கு அடுத்த இடத்தில் அமர வேண்டும். கால தாமதமாக வந்து பின்னர் அமர்ந்திருப்பவர்களிடம் எழுந்திருக்கும்படி சொல்வது நாகரீகமற்ற செயல் மட்டுமல்ல அது சபை ஒழுங்கீனம்.

அல்லாஹ்விடத்தில் அந்தஸ்தைப் பெற்ற வலிமார்கள், கல்வி கொடுக்கப்பட்டவர்கள் சில தடங்களின் காரணாக அந்த சபைக்கு கால தாமதமாக வரும் போது, அவை ஏற்பாட்டாளர்கள் அவர்களுக்கு இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.அவர்களுக்கு இடம் கொடுங்கள் எனக் கூறினால் நாம் சிறிது நெருக்கி அமர்ந்து அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் பல சமயங்களில் பத்ரு ஸஹாபாக்களுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள். அல்லாஹ்வும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பான். பத்ரு ஸஹாபாக்கள் மற்ற ஏனைய ஸஹாபாக்களைக் காட்டிலும் முதன்மையானவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு சிறப்பு சலுகையாக நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்திருக்கிறான். அந்தளவுக்கு அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மிகவும் திருப்தி ஏற்பட்டிருக்கிறது.

வெற்றி நிச்சயமில்லாமல் தோல்வி உறுதியான  வாழ்வா? சாவா? என்ற அந்த நேரத்தில் கூட தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் தீனுக்காக போரிட்ட அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைக் கொடுத்தான்.

நபியவர்களின் சபைக்கு பத்ரு ஸஹாபாக்கள் வந்தால் உடனே நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்காக இடம் கொடுங்கள் என்பார்கள். இதன் மூலம் மார்க்கத்தில் சிறப்புடையவர்களுக்கு, அல்லாஹ்வின் நேசர்களுக்கு, வலிமார்களுக்கு, கற்றறிந்த ஆலிம்களுக்கு நாம் அவர்களுக்குரிய மரியாதைய அளிக்க வேண்டும். சபைக்கு அவர்கள் கால தாமதமாக வந்து கடைசியில் அமர்ந்தாலும் அவர்களை முன்னால் கொண்டு வந்து அமர வைத்து அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்பது விளங்குகிறது.

இது குர்ஆனின் உத்தரவாகவும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்த வழிமுறையாகவும் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் சபையில் நபி மேல் கொண்ட ஆவலின் காரணமாக ஸஹாபாக்கள் ஆர்வத்தில் முன்டியடித்துக் கொண்டு முன்னால் அமர்ந்து இருப்பார்கள். நபியவர்களின் அவையில் எப்போதும் ஹள்ரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் இருப்பார்கள் என்றாவது ஒருநாள் ஏதாவது வேலையின் காரணமாக வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டு கடைசியாக வந்து அமர்ந்தால் நபியவர்கள் அவர்களுக்கு இடமளிக்கும் படியும் அவர்களை முன் வந்து அமரும் படியும் சொல்வார்கள்.

இவ்வாறு பத்ரு ஸஹாபாக்களுக்கும், சில முக்கிய ஸஹாபாக் களுக்கும் சொல்லியிருக்கிறார்கள்.

சிலர் சபையின் ஒழுக்கத்தைக் கெடுக்கும் விதமாக சப்தமிட்டுக் கொண்டு சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சபை ஒழுக்கம் கருதி நீங்கள் எழுந்து சென்று விடுங்கள் என்று கூறப்பட்டால் அவர் எழுந்து சென்று விட வேண்டும்.

இஸ்லாத்தில் சபை ஒழுக்கத்தின் போது உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது  கிடையாது. ஆனால் தலைமைக்கு கட்டுப் பட வேண்டும். மேற்கூறிய ஆயத்தில் அல்லாஹ் கூறுவதைப் போல ஈமானில் உயர்ந்தவர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.

குறிப்பாக கல்வி கொடுக்கப்பட்டவர்கள், உலமாக்கள், பேரறிஞர்கள் சபைக்கு வந்தால் அவர்களைக் கண்ணிப்படுத்தும் விதமாக தனி இடம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அல்லாஹ்வே அவர்களுக்கென்று தனி அந்தஸ்தையும் சிறப்பையும் கொடுக்கும் போது நாமும் அது போல நடந்து கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் செய்யக்கூடிய அமல் என்பது நமது ஈமானைப் பொறுத்தும் நமது கல்வியைப் பொறுத்தும் அந்தஸ்து பெறுகிறது.சாதாரணமான ஒரு மனிதன் அமல் செய்வதற்கும் கற்ற ஒரு ஆலிம் அமல் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.சராசரியான மனிதன் அமல் செய்வதற்கும் ஒரு ஞானி அமல் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

உலகில் நபிமார்களுக்கு அடுத்து ஸஹாபாக்களை விட ஈமான் கொண்டோர்களை விட ஹள்ரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் உயர்ந்தவர்கள், மிகச் சிறந்தவர்கள். இந்த சிறப்பு அவர்களின் அமல்களைக் கொண்டு அல்ல.ஏனென்றால் அமல் என்று பார்த்தால் அவர்களைக் காட்டிலும் நமது அமல்கள் அதிகமாக இருக்கும். இருந்தும் அவர்களுக்கு அதிக சிறப்பும் மதிப்பும் வழங்கப்படக் காரணம் அவர்களுக்கு இருந்த ஈமானின் உறுதி மற்றும் ஞானத்தின் காரணமாக இச்சிறப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கல்வியின் காரணமாக ஈமானின் வலிமையின் காரணமாக நம்முடைய அமல்களைக்காட்டிலும் அவர்களின் அமல்கள் வலிமைப் பெற்று விடுகிறது.

இந்த உலக மக்கள் அனைவரது தொழுகை நபி (ஸல்) அவர்கள் தொழுத இரண்டு ரக்அத் தொழுகைக்கு முன்னால் ஈடாகாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ;
فَأَنَا وَاللَّهِ أَعْلَمُكُمْ بِاللَّهِ ، وَأَتْقَاكُمْ لَهُ
நான் உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அறிந்தவன். அல்லாஹ்வை அதிகம் பயப்படுபவன்.

எந்தளவுக்கு ஞானம் இருக்கிறதோ அந்தளவுக்கு அல்லாஹ்வின் மீது அச்சம் இருக்கும். எந்தளவுக்கு அல்லாஹ்வின் மீது அச்சம் இருக்கிறதோ அந்தளவுக்கு அமல்களின் தரம் உயர்ந்ததாக, அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கும். அல்லாஹ்வுக்கு அமல்களின் தரம் பற்றி நன்றாக தெரியும்.

قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون
உலகில் அனைவரையும் சமமாக எடை போட்டு விடக் கூடாது. ஏனென்றால் கல்வி கொடுக்கப்பட்டவர்களும் கொடுக்கப் படாதவர்களும் இருக்கிறார்கள்.ஈமானில் உரம் உள்ளவர்களும் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். ஞானிகளும் ஞானமற்றவர்களும் இருக்கிறார்கள். எனவே அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்தக்கூடாது என்பது மேற்கூறிய வசனத்திலிருந்து புரியும் விஷயங்களாகும்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் நான்கு வகையான மக்களின் அந்தஸ்துகளை குறிப்பிடுகிறான்.

முதலாவது, பத்ரு போரில் கலந்து கொண்டவர்களின் அந்தஸ்தை உயர்த்தியிருக்கிறான்.

முஃமின்கள் யார் என்றால்

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

(உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (அல்குர்ஆன்: 8;2)

الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள். (அல்குர்ஆன்:8;3)

أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا ۚ لَّهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ

இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு. (அல்குர்ஆன் :8;4)

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டால் அவர்களின் இதயங்கள் நடுநடுங்கிவிடும் என்று கூறுகிறான். அல்லாஹ் அல்லாஹ் என்று கூப்பாடு போட்டாலும் கொஞ்சமும் நடுங்காத நமது ஈமானின் நிலையை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேற்கூறிய வசனத்தின் இறுதியில் அல்லாஹ், இவர்கள் தான் உண்மையான முஃமின்கள் என்று அவர்களை அடையாளப்படுத்துகிறான். மட்டுமல்ல சொர்க்கத்தில் இவர்களுக்கென்று அந்தஸ்துகள் இருக்கின்றது என்றும் கூறுகிறான்.

இரண்டாவது, அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்பவர்கள்.

لَّا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ ۚ فَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى الْقَاعِدِينَ دَرَجَةً ۚ وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَىٰ ۚ وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا
ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொரு வருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான். ( அல்குர்ஆன் :4;95)

மூன்றாவது. நல்லோர்கள்,நாதாக்கள்,ஸாலிஹீன்கள். இவர்களுக்கும் அல்லாஹ்விடம் அந்தஸ்துகள் இருக்கின்றது.

وَمَن يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَٰئِكَ لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَىٰ

ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு. (அல்குர்ஆன் :20;75)

நான்காவது, ஆலிம்கள்.
يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ

உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - (அல்குர்ஆன் :58;11)

இல்மு கொடுக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்துகளை அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.

பத்ரு ஸஹாபாக்கள், இஸ்லாத்திற்காக போரில் கலந்து கொண்டோர்கள், வலிமார்கள் நல்லோர்கள், இல்மு கொடுக்கப்பட்ட ஆலிம்கள் போன்றவர்களுக்கு சிறப்பு இருக்கிறது என்று மேற்கூறிய வசனங்களில் அல்லாஹ் பதிவு செய்கிறான்.

ஆகவே அல்லாஹ் யாரை சிறப்பித்தானோ அவர்களை நாமும் சிறப்பிக்க வேண்டும்.அல்லாஹ் யாரை மேன்மையாக்கினானோ அவர்களை நாமும் முன்னிலைப்படுத்தி மேன்மையாக்க வேண்டும்.

ان عمر رضي الله عنه لقى نافع بن الحارث بعسفان -وهو مكان بين مكة والمدينة أقرب إلى مكة- وكان قد استخلفه على أهل مكة، فقال له: ما استخلفت على أهل الوادي أي: مكة؟ قال: ابن أبزي قال: ومن ؟ ابن أبزي قال: رجل من موالينا -والمولى يطلق على العبيد ويطلق على من كان عبداً ثم أعتق- قال: استخلفت عليها مولى؟! -أي: رجلاً كان عبداً ثم أعتق- قال: إنه قارئ لكتاب الله عالم بالفرائض، فقال عمر: أما إن نبيكم صلى الله عليه وسلم قد قال: إن الله ليرفع بهذا الكتاب أقواماً ويضع به آخرين

நாபிஃ பின் அப்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களை கலிபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் மக்காவின் கவர்னராக ஆக்கியிருந்தார்கள். அன்றொரு நாள் அஸ்ஃபான் என்ற இடத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது கலிபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் நாபிஃ (ரலி) அவர்களிடம் உங்களுக்கு பதிலாக யாரை கலீஃபாவாக அங்கு நியமித்து விட்டு வந்திருக்கிறீர்கள்? எனக் கேட்டார்கள். எனது அடிமையை நான் கலீஃபாவாக ஆக்கிவிட்டு வந்துள்ளேன் என பதிலளித்தார்கள். ஒரு அடிமையை கலீஃபாவாக ஆக்கினீர்களா? என ஆச்சரியம் மேலிட உமர் (ரலி ) அவர்கள் கேட்ட போது, நாஃபிஃ (ரலி ) அவர்கள், அவர் உரிமை விடப்பட்ட அடிமை என்றாலும் அவர் ஒரு காரி. அதாவது குர்ஆனை கற்று பொருளறிந்து ஓதக்கூடியவர், மட்டுமல்ல பாகப்பிரிவினை சட்டம் கற்றவர் என்றார்கள். அதைக்கேட்டவுடன் உமர் (ரலி ) அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் சில கூட்டத்தை இந்த வேதத்தைக் கொண்டு உயர்த்துகிறான், சிலரைத் தாழ்த்துகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை எடுத்துக் கூறினார்கள்.

ராகமாக ஓதுவது மட்டும் காரி என்பதல்ல. நபித்தோழர்களுக்கிடையே காரி என்றால் குர்ஆனை கற்று அதன் பொருளறிந்து ஓதுபரைச் சொல்வார்கள். அடிமையாக இருந்த அவருக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்த்து கிடைக்கக் காரணம் அவரிடம் இருந்த இல்மாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் பெரும்பெரும் மேதைகளில் பலரும் ஒரு நேரத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் தான். அவர்களுக்கு மதிப்பையும், அந்தஸ்த்தையும் கொடுத்தது இந்த இல்ம் தான்.

இமாம் புகாரி அவர்கள் கல்வியின் சிறப்பை எடுத்துச் சொல்வதற்காக வேண்டி கொண்டு வந்த இரண்டாவது ஆதாரம் ;

فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ ۗ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَىٰ إِلَيْكَ وَحْيُهُ ۖ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا

ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! (அல்குர்ஆன் :20;114)

நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் தன்னிடம் ஞானத்தை, கல்வியை அதிகமாக தருமாறு கேட்கும்படி உத்தரவிடுகிறான்.

ஞானம், மக்கள் செல்வம், பொருள் செல்வம், ஆட்சி அதிகாரம், என்று எல்லா செல்வமும் நிரப்பமாக கொடுக்கப்பட்ட நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்விடம் எனக்கு இதை அதிகமாக தா என எதையும் கேட்ட தில்லை. கேட்கும்படி அல்லாஹ்வும் சொல்லவில்லை.ஆனால் இல்மை மட்டும் அல்லாஹ் தன்னிடம் இன்னும் அதிகமாக்கித் தா என கேட்கும்படி சொல்கிறான்.

நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆனின் வசனங்கள் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக இறங்கிக் கொண்டிருக்கும் போது அவ்வசனங்கள் விரைவாக தனக்கு மனனமாக வேண்டும் என்ற ஆவலில் நபியவர்கள் ஜிப்ரயீல் அவர்களோடு இணைந்து ஓதினார்கள்.
அப்போது அவ்வாறு ஓத வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்த்துவதற்காக இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கினான் ;

لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ

(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர். (அல்குர்ஆன் :75 ;16)
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ

நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. (அல்குர்ஆன் :75 ;17)

فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ

எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 75 ;18)

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ

பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. (அல்குர்ஆன் : 75 ;19)

மேற்கூறிய வசனங்களில் இருந்து சில விசயங்களை நாம் நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.

மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும், குர்ஆன் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதைத் தான் கவனமாக கேட்க வேண்டும். அந்த நேரத்தில் பேசிக் கொண்டிருப்பது தவறான காரியமாகும். தஸ்பீஹ் செய்வதைக்கூட தவிர்க்க வேண்டும்.

குர்ஆன் ஓதும் போது, அல்லது தஸ்பீஹ் செய்யும் போது இறைவனின் நினைவோடு மன ஓர்மையோடு முழுமையாக அதில் ஈடுபட வேண்டும். அதிலும் குறிப்பாக குர்ஆன் ஓதப்பட்டால் அமைதியாக காது தாழ்த்தி மௌனமாக அதைக் கேட்க வேண்டும்.

وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ

குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 7 ;204)

மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ், தொழுகையில் குர்ஆன் ஓதப்பட்டால் கூடவே சேர்ந்து ஓதாமல் அதை காது தாழ்த்தி கேட்கும் படி சொல்கிறான். அல்லாஹ் நம்மிடம் அதனுடைய விளங்களை தன்னிடம் கேட்க சொல்லியிருக்கிறான்.

ரப்பி ஸித்னீ இல்மா இறைவா எனக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக

மார்க்கக் கல்வியாக இருந்தாலும் சரி, உலகக் கல்வியாக இருந்தாலும் சரி, நமது குழந்தைகள் கல்வி கற்க செல்கின்ற போது அவர்களுக்கு இந்த துஆவை சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த துஆவை ஓதிய பிறகு கல்வியை கற்கச் சொல்ல வேண்டும்.

உலகில் அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கும் அவரவர்களுக்குத் தகுதியான பாக்கியங்களை வழங்கியிருக்கிறான். சிலருக்கு குழந்தைச் செல்வம் பெரியதாக இருக்கிறது, சிலருக்கு பொருட்ச் செல்வம் பெரியதாக இருக்கிறது.

ஆனால், அல்லாஹ்வின் பார்வையில் மிகச் சிறந்த நிஃமத் என்பது எது என்றால்...?
திருக்குர்ஆனின் அத்தியாங்களில் சூரத்துல் ளுஹா என்ற 93-வது அத்தியாயத்தில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று நிஃமத்துகளை சொல்லி அதற்கு எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்பதையும் பின்வரும் மூன்று ஆயத்தின் மூலமாக தெரிவிக்கின்றான்.

முதலாவது நிஃமத்  ;
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?

இதற்கு எப்படி நன்றி செலுத்த வேண்டுமென்பதை

فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். (அல்குர்ஆன் : 93 ; 9) என்ற வசனத்தில் கூறுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
أبو هريرة رضي الله عنه أن رجلاً شكا إلى النبي صلى الله عليه وسلم قسوة قلبه فقال: "إن أردت أن يلين قلبك فأطعم المساكين وامسح رأس اليتيم
இரக்கமற்ற உள்ளமுடைய ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தன் உள்ளத்தைப் பற்றி முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரிடம் உள்ளம் இரக்கம் கொண்டதாக மாற ஏழைகளுக்கு உணவளிக்குமாறும் அநாதைக் குழந்தைகளின் தலையை தடவுமாறும் ஏவினார்கள்.

குழந்தைகளின் விசயத்தில் நாம் அநீதமாக நடந்து கொள்ளக் கூடாது அதிலும் குறிப்பாக எத்தீமான அநாதைக் குழந்தைகளின் விசயத்தில் அநீதமாக நடந்தால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கேட்பதற்கு ஆளில்லை என்பதற்காக அவர்களின் விஷயத்தில் நாம் வரம்பு மீறினால் அது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வரும்.

இரண்டாவது நிஃமத் ;
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.

அல்லாஹ் கொடுத்த செல்வத்திற்கு நாம் எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்பதை
 وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
யாசிப்போரை விரட்டாதீர்என்ற வசனத்தின் வழியே உணர்த்துகிறான்.

உதவி கேட்டு வருபவர்களை விரட்டக் கூடாது. அல்லாஹ் நமக்கு கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

மூன்றாவது நிஃமத் ;
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ
இன்னும், நபித்துவத்தின் ஞானம் இல்லாமல் இருந்த உங்களுக்கு நபித்துவத்தை வழங்கி அதன் ஞானத்தை அவன் அறிவித்தான். (அல்குர்ஆன் : 93 ;7)

நபிப் பட்டம் பெறுவதற்கு முன்னால் நபியவர்களுக்கு நுபுவ்வத்தின் ஞானம் இல்லாமலிருந்தது. நபித்துவம் பெற்றதற்கு பிறகு ஞானம் கிடைத்தது. இதற்கு எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்பதை ;
 وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக (அல்குர்ஆன் : 93 ; 11) என்ற வசனத்தின் வழியே உணர்த்துகிறான்.

அல்லாஹ் ஒரு மனிதனுக்கு கல்வி அறிவை கொடுத்தான். கல்வியறிவு கொடுப்பட்ட அவன் அதற்கு எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்றால், அந்த கல்வி ஞானத்தைத் தேடி வருபவர்களுக்கு அதை கற்றுக் கொடுக்க வேண்டும். மூடி மறைக்க கூடாது.

இதில் முதல் இரண்டு நிஃமத்துகளை அல்லாஹ் கூறிப்பிடும் போது, அதை நிஃமத் என்று குறிப்பிடவில்லை.ஆனால் நபித்துவத்தின் ஞானத்தைப் பற்றி கூறும் போது அல்லாஹ் அதை நிஃமத் என்பதாக குறிப்பிடுகிறான்.எனவே கல்வி ஞானம் வழங்கப்படுவதைத்தான் அல்லாஹ் நிஃமத்தாக கருதுகிறான் என்பது புரிகிறது.

இப்படிப்பட்ட நபித்துவத்தின் கல்வி ஞானம் பயான் மூலம் சொல்லப் படுகிறது என்றால் அதை பெற்றுக் கொள்ள, நாம் சந்தோஷத்தோடு உள்வாங்க விரைந்து செல்ல வேண்டும். மட்டுமல்ல நமது வாழ்க்கையில் அதை கொண்டு வர வேண்டும்.    
       
سَأَلَ رَجُلٌ الْحَسَنَ الْبَصْرِيَّ عَنِ الإِيمَانِ ، فَقَالَ الإِيمَانُ إِيمَانَانِ ، فَإِنْ كُنْتَ تَسْأَلُنِي عَنِ الإِيمَانِ بِاللَّهِ ، وَمَلائِكَتِهِ ، وَكُتُبِهِ ، وَرُسُلِهِ ، وَالْجَنَّةِ وَالنَّارِ ، وَالْبَعْثِ ، وَالْحِسَابِ ، فَأَنَا مُؤْمِنٌ ، وَإِنْ كُنْتَ تَسْأَلُنِي عَنْ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ : إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ سورة الأنفال آية 2 ، قَرَأَ إِلَى أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا سورة الأنفال آية 4، فَوَاللَّهِ ، مَا أَدْرِي أَنَا مِنْهُمْ أَوْ لا .

ஹளர்த் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களிடம் நீங்கள் முஃமினா? என்று ஒருவர் கேட்டார்.அதற்கவர்கள்,இரண்டு வகையான ஈமான் இருக்கிறது. ஒன்று ; அல்லாஹ்வையும்,அவனது மலக்குமார்கள், வேதங்கள்,ரசூல்மார்கள், சொர்க்கம், நரகம், மறுமையில் எழுப்பப்படு தல், கேள்விக்கணக்கு போன்றவற்றை ஈமான் கொள்வது.இந்த ஈமானைப்பற்றி என்னிடம் கேட்டால் நான் முஃமின் தான். இரண்டாவது ;  (8:4) இந்த வசனத்தில் சொல்லப்படுகின்ற ஈமான். இந்த ஈமானைப் பற்றி என்னிடம் கேட்டால் அந்த முஃமின்களில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்று எனக்கு தெரியாது என்றார்கள்.

ஹஸனுல்பஸரி (ரஹ்) அவர்கள் எல்லா தரீக்காக்களுக்கும் துவக்கமாக இருக்கிறார்கள்.அனைத்து தரீக்காக்களும் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களைச் சேர்ந்து ஹள்ரத் அலி (ரலி) அவர்களைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்களை சென்றடைகிறது.அவர்கள் பின் நின்று தொழுதால் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நின்று தொழுததைப் போல் இருக்கும் என்று அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்.

அத்தகைய பெரும் மேதையும் பேரறிஞருமான ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களே உண்மையான முஃமின்களில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்று தெரியவில்லை என்று சொல்கிறார்கள் என்றால்,இந்த புரிதல் தான் உண்மையான முஃமின் என்பதற்கான அடையாளமும் இவர் தான் இல்ம் கொடுக்கப்பட்டவர் என்பதற்கான ஆதாரமும் ஆகும்.இத்தகையோருக்கு சிறப்பு இருக்கிறது.

இல்மின் சிறப்பைப் பற்றி தெரிந்த பின்னர் அதை கற்றுக் கொள்ளச் சென்றால் தான், அதன் சிறப்பும் மகத்துவமும் தெரிந்து அதில் நாம் ஆர்வம் காட்டி கற்போம் என்பதற்காகத்தான் இமாம் புகாரி ரஹ் அவர்கள் ஆரம்பமாக இல்மின் சிறப்பைப் பற்றி தனது நூலில் முதலாவதாக குறிப்பிடுகிறார்கள்.


3 comments:

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks