Wednesday, 31 August 2016

குர்பானி-2

இப்படி வலிப்பினால் துடிப்பது கூட இரத்தம் தேங்காமல் முழுமையாக வெளியேறுவதற்கு ஒரு காரணமாகும். இரத்தக்குழாய் அறுக்கப்பட்டதும் மூளைக்குச்செல்லும் இரத்தம் குறைந்து கொண்டே வருவதைக்கண்ட மூளை உடனே தனக்கு அதிக ரத்தம் அனுப்பிவைக்க இதயத்திற்கு உத்தரவிடுகின்றது. இதை ஏற்றுக்கொண்டு ,இதயம்,உடலின் அனைத்து பகுதிக்கும் உடனடியாக மூளைக்கு இரத்தம் வரவேண்டும் என்று உணர்த்துகிறது. இதையடுத்து எல்லாப்பகுதியிலிருந்தும் இரத்தம் விரைகிறது. இதயத்தின் வழியாக அது மூளையை நோக்கி ஓடி வருகிறது. ஆனால் மூளைக்குச்செல்லும் இரத் தக்குழாய் அறுபட்டிதுள்ளதால் அது குரல் வளை வழியாக வெளியேறி விடுகிறது. இந்த வகையில்; மூளைக்குச்செல்லும் இரத்த வரத்து நின்றவுடன் அவ்விலங்கு உணர்விழந்து விடுகிறது. இப்படி மூளையும் இதயமும் உடனடி இரத்தம் தேவை என்று பரபரத்து , உடலின் எல்லாப்பகுதியிலிருந்தும்  இரத்த வரத்து திமு திமு வென அதிகரிப்பால் விலங்கின் கை கால் துடிப்பு அதிகமாகி சீக்கிரம் இரத்தம் வெளியேறிவிடுகிறது. இதனால் இறைச்சி சுத்தமாகி சாப்பிடுவதற்கு ஏற்ற சுகாதார நிலையை அது அடைந்து விடுகிறது.
ஆக குர்பானி,கொடூரமான ஒரு செயல் அல்ல.காரணம் அது கருணையுள்ள கடவுளின் கட்டளை. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பு டையோன் அல்லாஹ் வின் ஆணை அது. (அல்குர்ஆன்.108:02)
அகிலத்திற்கோர் அருட் கொடை அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களின் அழகிய அருள் மொழி.நபி கள் நாயகத்தின் (ஸல்) நளினமான நயமான நடைமுறை.
وفي صحيح مسلم مرفوعا...ثم انصرف الي المنحدر فنحرثلاثاوستين بيده ثم أعطي عليا فنحرماغبروأشركه في هديه...الحديث.
قال ابن القيم في زادالمعاد:وكان عددهذاالذي نحره عددسنين عمره
مات النبي صلي الله عليه وسلم وعمره  63 عاما. وكذالك أبوبكر وعمر رضي الله عنهما في هذاالسن وكلهم دفنوابجواربعضهم البعض
قال ابوحاتم رحمه الله :العلة في نحرالمصطفي صلي الله عليه وسلم ثلاثا وستين بدنة بيده دون ماوراءهذاالعدد : ان له في ذا لك اليوم كانت ثلاثاوستين سنة ونحرلكل سنة من سنيه بدنة بيده وأمرعليا بالباقي فنحرها

காரூண்ய நாதா கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் 100 ஒட்டகம் குர்பானி கொடுத்தார்கள். அதில் 63 ஒட்டகைகளை தங்களது அருளான திருக்கரம் கொண்டு அறுத்தார்கள். மீதமுள்ள 37 ஒட்டகங்களை ஹழரத் அலீ ரலி அவர்களை அறுக்கச்சொல்லி கத்தியைக் அவர்களிடம் கொடுத்தார்கள்.
இதன் மூலம்  தங்களது ஆயுள் 63 வருடம் தான் என்பதை சொல்லாமல் சொன்னார்கள்
மேலும் அன்று  அவர்களுக்கு 63  வருடம்-வயது ஆகியிருந்தது. ஒரு வயதுக்கு ஒரு ஒட்டகம் வீதம்  63  வருடங்களுக்கு   63  ஒட்டகம் தங்களது திருக்கரத்தால் அறுத்துப்பலியிட்டார்கள்.
இதில் ஆச்சரியமான ஒரு ஒற்றுமை என்ன வென்றால் அவர்களின் உற்ற தோழர்களான ஹழரத் அபூபக்கர் ஸித்தீக் ரலி,ஹளரத் உமர் ரலி ஆகிய இருவருக்கும் கூட வயது 63 தான்.அவர்கள் மூவரும் அருகருகே அடக்கம்செய்யப்பட்டுள்ளார்கள்.
குர்பானி கொடூரமான ஒரு செயல் என்றால் கருணை நபி ஸல் அதை சய்திருக்கமாட்டார்கள் இல்லையா

*குர்பானி கொடுப்பதற்கு முன் அந்தப் பிராணிக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்
*கிப்லா வை நோக்கி அதன் முகத்தை திருப்பி வைக்கவேண்டும்
*காலை  காதைப் பிடித்து தர தர வென இழுத்து வரக்கூடாது. கழுத்தைபிடித்து மென்மையாக அழைத்து வரவேண்டும்
عن ابن سيرين أن عمر رضي الله عنه رأى رجلا يسحب شاة برجلها ليذبحها فقال له:ويلك قدها الي الموت قوداجميلا رواه عبد الرزاق
*அதற்கு முன்பு வைத்து கத்தியை தீட்டக்கூடாது
عن ابن عباس رضي الله عنهما قال :مررسول الله صلي الله عليه وسلم علي رجل واضع رجله علي صفحة شاة،وهو يحدشفرته وهى تلحظ أليه ببصرها قال:أفلا قبل هذا ؟أوتريد ان تميتها موتتين  رواه الطبراني في الكبير والاوسط ،ورجاله رجال الصحيح
ஒரு மனிதர் ஆட்டின் கழுத்தில் தனது காலை வைத்து அழுத்திக்கொண்டு அது பார்க்கவே கத்தியை தீட்டிக்கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக சென்ற செம்மல் நபி ஸல் அவர்கள் இதைக்கண்டித்தார்கள்  முன்பே செய்திருக்கக்கூடாதா? அதற்கு இரண்டு மரணம் கொடுக்க னுமா?

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks