Wednesday 31 August 2016

குர்பானி,கொடூரமல்ல.காரூண்யமானது

ஜெர்மனியில் உள்ள ஹனோவர் பல்கலைக்கழகத்தில் உணவுக்காக விலங்குகளை அறுக்கும் முறைகள் பற்றிய ஆராய்ச்சி ஒன்று நடந்தது.அதில் எந்த அறுக்கும் முறை,அவ்விலங்குகளுக்கு நன்மையானது என்று ஆராயப்பட்டது.
இவ்வாய்வை நடத்திய பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துனை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆகிய இருவரும் உணவுக்காக அறுக்கப்படும விலங்குகளை முதலில் தேர்வு செய்தனர்.பிறகு அவைகளில் அறுவை சிகிச்சைசெய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத்தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக்கருவிகளை பொருத்தினர் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவைகளுக்கு மயக்கம் தெளிந்து உணர்வு திரும்பியதும் முழுமையாக குணமடைய பல வாரம் அப்படியே அவைகள் விடப்பட்டன. அதற்குப்பிறகு அதில் பாதி விலங்குகளை இஸ்லாமிய ஹலால் முறையில் அறுக்கப்பட்டது.மறு பாதியை மற்ற முறையில் கொல்லப்பட்டது
பரிசோதனையின்போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் EEG,மற்றும் ECG பதிவு செய்யப்பட்டன.EEG மூளையின் நிலையையும் ECG இருதயத்தின் நிலையையும் படம் பிடித்துக்காட்டின.
இந்த பரிசோதனையின் முடிவில்; இஸ்லாமிய ஹலாலான முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளுக்கு, அறுக்கப்பட்ட முதல் மூன்று முதல் வினாடிகளுக்கு EEG யில் எந்த மாற்றமும் தென்படவில்லை அறுக்கப்படுவதற்கு முன்பிருந்த தலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது.இது, அவ்விலங்குகள் அறுக்கப்படும்போது அவை வலியினால் துன்பப்படவில்லையென்பதை துல்விதமாக காட்டியது. இந்த மூன்று வினாடிகளுக்குப்பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு அவ்விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளா கின்றன என்பதை EEG பதிவு காட்டியது. இந்த உணர்வற்ற நிலை உடம்பிலிருநது அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது. மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப்பிறகு EEG  பூஜ்ய நிலையைப்பதிவு செய்துதது. இது,அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது எந்த வதைக்கும் ஆளாகவில்லை என்பதை காட்டியது.
ECG  யின் பதிவில் இதயத்துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடித்ததுக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. இப்படி மூளையின் நிலையையும் பூஜ்யமாக EEG பதிவு செய்த நேரத்திலும் இதயத்துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகின்றது.அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகின்றது என்று அகழ்வாராய்ச்சியின் மூலம்  அவர்கள் கண்டறிந்தனர்.
அடுத்து இஸ்லாமிய ஹலால் அல்லாத முறையில் கொல்லப்பட்ட விலங்குகள் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த முறையில் அவ்விலங்குகள் உடனே நிலைகுலைந்து செயலிழந்த நிலைக்குப்போகின்றது.அப்போது அவ்விலங்குகள் செயலிழந்தாலும் உணர்விழக்காத காரணத்தால் மிகக்கடுமையான வலியால் அவதியுறுவதை EEG பதிவு காட்டியது. அதேநேரத்தில் அவ்விலங்குகளின் இதயம்,ஹலால் முறையில்அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும்போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் அதிகமான ரத்தம் தேங்கிவிடுகிறது. இப்போது இரத்தம் உறைந்து அதிகமான நுண்கிருமிகள் இரத்தத்திலேயே தங்கி விடுவதால் அந்த மாமிசம் உட்கொள்ளதக்க  சுகாதார நிலையை அடைவதில்லை,என்று தங்களது ஆய்வின் முடிவை அந்த ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்தனர்.
ஆனால் இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்; "அறுக்கும் கத்தியைக்கூர்மையாக்கி  அழகான முறையில் அறுங்கள் அதன் மூலம் அந்த அறுக்கப்படும் பிராணிக்கு ராஹத்தை-சுகத்தை கொடுங்கள் " என்று அகிலத்திற்கு அறிவித்தார்கள்  நூல்:முஸ்லிம்
عن شداد بن أوس رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم أن الله كتب الإحسان علي كل شيء فاذاقتلتم فأحسنوا القتلة،واذاذبحتم فأحسنواالذبحة،وليحدأحدكم شفرته وليرح ذبيحته صحيح  رواه مسلم 1955،وابوداؤد 2815،والنسائي7/313 وابن ماجة 317

நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கு அறம் -நன்மை செய்வதை கட்டாய விதியாக்கினான் ஆகவே ....அறுப்பதாக இருந்தால் அழகான முறையில் அறுங்கள்.உங்களில் ஒருவர் தனது அறுக்கும் ஆயுதத்தை கூர்மையாக்கி அவருடைய அறுப்பு பிராணிக்கு  ராஹத்-சுகம் கொடுங்கள்.நபி மொழி . நூல் முஸ்லிம் :1955

கூர்மையான ஆயுதம் கொண்டு அறுப்பதால் முதலில் வலி தெரிவதில்லை.வேதனையையும் உணரும் வேளை வரும்போது அதற்கு உணர்வுகள் இருப்பதில்லை.கூர்மையான பிளேடினால் உடலில் காயம் ஏற்படும்போது ஆரம்பத்தில் அறுபட்ட வலி தெரிவதில்லை இரத்தம் பீறிட்டு வெளிவருகிறபோது தான் வலியையும் நாம் உணர்கிறோம் இல்லையா! அவ்வாறே இங்கே அறுபட்ட ஆரம்ப நிமிடங்களில் அவைகளுக்கு வேதனை தெரிவதில்லை. வேதனை வெளிப்படும் வேளையில் இரத்தம் முழுமையாக வெளியேறிவிடுவதால் அது மயக்க நிலையை அடைந்து உணர்விழந்துவிடுவதால் வலியைஉணராமலேயே அவ்விலங்கு இறந்து விடுகின்றன.

ஹலால் அல்லாத முறையில் அவர்கள்
அறுக்கும்  முறை
_____________________

கோழி போன்ற பறவையினங்களை நீரில் அழுத்தி திக்குமுக்காடவைத்து,கழுத்தை திருகி,நசுக்கி கொல்லுகின்றனர். மேலைநாடுகளில் சில கீழை நாடுகளிலும் கிட்டத்தட்ட  விலங்குகளை ஸ்டென்னிங் முறையில் தலையில் ஆயுதத்தால் ஓங்கி ஒரு போடு போட்டு அல்லது கைத்துப்பாக்கியால் அதன் தலையில் சுட்டு அவைகளை நிலை குலைய வைத்து அதன் பின் அறுக்கின்றனர்.  இம்முறையில்  அவ்விலங்குகள் நிலை குலைந்து செயலிழந்து  விடுகின்றன ஆனால் அவைகள் உணர்வோடு இருப்பதால் தொடர்ந்து அவர்கள் அறுக்கும்போது அவைகள் மிகுந்த வலியால் துன்பப்படுகிறது.இநத முறையில் அவ்விலங்குகள் அறுத்த பின் துடிப்பதில்லை.அதனால் அவைகளுக்கு வேதனையில்லை என்று அர்த்தமில்லை.ஏனெனில் அதன் மூளையும் நரம்பு மண்டலமும்பாதிக்கப்பட்டு  செயலிழந்து விடுவதால் இவைகளால் துடிக்கமுடியவில்லையே தவிர வேதனை இல்லாமல் இல்லை. ஏற்கனவே விளக்கப்பட்டபடி அவைகள்கடுமையான வேதனையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறது ஆனால் அதை வெளிப்படுத்த இயலாமல் செயலிழந்துள்ளது இன்னும் சொல்லப்போனால் வேதனையின் போது துடித்தாலாவது கொஞ்சம் ஆசுவாசமாவது ஏற்படும் ஆனால் இங்கே வலிக்கும்போது முடிக்கவும் மடியவில்லையென்றால் இதை விட பெரிய அவஸ்தை வேறு என்ன இருக்க முடியும்.

இஸ்லாமிய ஹலாலான அறுப்பு முறை
_____________

தலைக்கு இரத்தத்தைக்கொண்டு செல்லும் ரத்த நாளமும் இரத்தத்தை தலையிலிருந்து வெளிக்கொண்டு வரும் ரத்தக்குழாய்களும்  அறுபடுவதோடு,மூச்சுக்குழாய், மற்றும் உணவுக்குழாய் முதலியவை ஒரு சேர அறுக்கப்படுவதாகும்
இந்த முறையில் இரத்தம் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. இந்த முறையில் அறுத்த பின் கை கால் துடிக்கும்.இது வலிப்பினால் துடிக்கிறதே தவிர வலியினால் அல்ல.மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறபோது அவர்கள் துடிப்பது வலியினால் அல்ல மாறாக வலிப்பினால்.வலிப்பானது,நரம்புத்தொகுதியில் ஏற்படும் அசாதாரண நிலைகளின் போது ஏற்படுகிறது.

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks